Idhayam Matrimony

அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் 25-ம் தேதி தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      தமிழகம்
Anbumani 2024-12-29

Source: provided

சென்னை : பா.ம.க. நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி ராமதாஸ் வருகிற 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் வருகிற 25-ம்தேதி தொடங்க உள்ள நிலையில் அதன் முதல் கட்ட பயண விவரம் குறித்து பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரும் 25-ம்தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி, நலவாழ்வுக்கான உரிமை,  மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை,  நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை,  ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பன தான் இந்த உன்னத பயணத்தின் முதன்மை நோக்கங்களாகும்.

பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாளான ஜூலை 25-ம்தேதி மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ம்தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது. இந்தப் பயணத்தின் முதல்கட்ட விவரங்கள் வருமாறு:- வருகிற  25- திருப்போரூர் இருந்து சுற்றுபயணத்தை தொடங்கும் அவர் 26- செங்கல்பட்டு, உத்திரமேரூர், 27- காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், 28- அம்பத்தூர், மதுரவாயில், 31- கும்மிடிப்பூண்டி, ஆகஸ்ட் 1- திருவள்ளூர், திருத்தணி, 2- சோளிங்கர், ராணிப்பேட்டை, 3- ஆற்காடு, வேலூர், 4- வாணியம்பாடி, திருப்பத்தூர், அடுத்தக்கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து