Idhayam Matrimony

விளையாடுங்கள் அல்லது ஓய்வெடுங்கள்: பும்ராவுக்கு இர்பான் பதான் அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

 மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடுங்கள் அல்லது சரிவர ஓய்வெடுங்கள் என ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அறிவுரை கூறியுள்ளார்.

இங்கி. முன்னிலை...

இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

வெற்றி கட்டாயம்...

தொடரை இழக்காமலிருக்க மான்செஸ்டர் டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது டிரா செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்பது அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஓய்வெடுங்கள்...

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடுங்கள் அல்லது சரிவர ஓய்வெடுங்கள் என ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் அறிவுரை கூறியுள்ளார்.

அற்புதமான வீரர்...

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அற்புதமான வீரர். அவரது திறமைகளை நான் முற்றிலும் விரும்புகிறேன். அவர் மிகவும் திறமைவாய்ந்த வீரர். இருப்பினும், இந்திய அணிக்காக ஒருவர் விளையாடும்போது, தன்னால் முடிந்த அளவுக்கு வெற்றிக்காக அனைத்தையும் கொடுக்க வேண்டும். ஒரு ஸ்பெல்லில் 5 ஓவர்கள் வீசும்போது, ரூட் பேட்டிங்குக்கு வரும்போது கூடுதல் முயற்சி செய்து 6-வது ஓவரை பும்ரா வீசவில்லை. நீங்கள் அணிக்காக அனைத்தையும் கொடுங்கள் அல்லது சரிவர ஓய்வெடுங்கள்.

கூடுதலாக முயற்சிகள்... 

நாடு அல்லது அணிக்காக விளையாடும்போது, உங்களுக்கு நாட்டின் அல்லது அணியின் நலனே எப்போதும் முதலாவதாக இருக்க வேண்டும். பும்ரா முயற்சி செய்யவில்லை எனக் கூறவில்லை. அவர் பந்துவீச்சில் ஈடுபடுகிறார். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், அணிக்காக கூடுதலாக முயற்சிகள் தேவைப்படும்போது, அதனை அவர் செய்ய வேண்டும். இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதனை செய்கின்றனர் என்றார்.

அதிருப்தி...

கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து