முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு: ரஸலுக்கு சக வீரர்கள் கவுரவம்

புதன்கிழமை, 23 ஜூலை 2025      விளையாட்டு
Russell 2025-07-23

Source: provided

கிங்ஸ்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார்.   இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.

1078 ரன்கள் குவிப்பு...

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அந்த்ரே ரஸல். 37 வயதான இவர், ரஸல் 2019ஆம் ஆண்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 1078 ரன்கள் அடித்துள்ளார். 61 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ரஸல் அவருடைய சொந்த ஊரான ஜமைக்காவில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அணிக்கு பின்னடைவு...

தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் கார்ட் ஆப் கானர் அளித்து கௌரவித்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், ரஸல் ஓய்வு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாதிப்ப ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

56 ஒருநாள் போட்டிகள்...

முன்னதாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதிலேயே ஓய்வை முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஸல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1034 ரன்கள் அடித்துள்ளார். 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அடுத்த தலைமுறை கரீபியன் கிரிக்கெட்டர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் வகையில், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை உயரிய நிலையில் முடிக்க விரும்புகிறேன் என ரஸல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து