முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது : தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 23 ஜூலை 2025      தமிழகம்
TN 2025-07-23

Source: provided

ஜெயங்கொண்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர்  ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது. இதில் அமைச்சர்கள் சிவசங்கர், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோரம் பங்கேற்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ள, மாமன்னர் ராஜேந்திர சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவரின் பிறந்தநாளை ஆடி மாத திருவாதிரை விழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டு ஆடி திருவாதிரை விழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழா, மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை அவர் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவை முன்னிட்டு நேற்று காலை பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் யாழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாட்டிய நாடகம், கிராமிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதியம் "சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் நிர்வாகத்திறனே! போர் வெற்றிகளே!" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்சுவை நிகழ்ச்சிகள், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மக்களிசைப் பாடல்கள் நடைபெற்றன. மாலையில் ராஜேந்திரசோழன் நாடகம், மயில் காவடி, கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் சிவசங்கர், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோரம் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து