முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத்

புதன்கிழமை, 23 ஜூலை 2025      விளையாட்டு
Harmanpreet-Kaur 2023-07-23

Source: provided

லண்டன் : இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

வரலாற்றுச் சாதனை...

இங்கிலாந்து மகளிருக்கு எதிராக இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரையும் வென்று சாதனை படைத்திருந்த நிலையில் ஒருநாள் தொடரையும் வென்று அசத்தினார்கள். இந்தப் போட்டியில் சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆட்டநாயகி விருதை வென்றார்.

இதுவே முதல்முறை... 

இந்த விருதை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீராங்கனை கிராந்தி காட்டுடன் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் ஒரு வெளிநாட்டு வீராங்கனை 3 சதங்கள் அடித்தது இதுவே முதல்முறை. இந்தச் சாதனைக்கு சொந்தக்காரியாக நமது மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

3-வது இந்தியர்....

ஹர்மன்ப்ரீத் கௌர் ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இவருக்கு முன்பாக மிதாலி ராஜ் 7,805 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 4,588 ரன்களும் எடுத்துள்ளார்கள். 

எனது தந்தைக்கு... 

இந்தப் போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியதாவது: அணியினர் அனைவருக்குமே இது நல்ல தருணங்களாக இருக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். டபிள்யூபிஎல் தொடரில் பெற்ற அனுபவம் கிராந்தி, ஸ்ரீ சரணிக்கு உதவின. மேலும், ஃபீல்டிங் பயிற்சியாளருக்கும் இந்த வெற்றியில் பங்கு இருக்கிறது. இந்த வெற்றி எங்கள் அனைவருக்குமே முக்கியமானது. இந்த சிறப்பான ஆட்டத்தை நான் எனது தந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர் இந்த மாதிரியான ஆட்டத்துக்காக காத்திருந்தார். கடினமாக உழைத்தது சரியான நேரத்தில் கைகொடுத்தது. முதலில் சிறிது அழுத்தம் இருந்தது. தீப்தி முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுப்பார். உலகக் கோப்பைக்கு இந்தப் போட்டிகள் மிகவும் உதவுகின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து