முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரை வென்றது இந்தியா

புதன்கிழமை, 23 ஜூலை 2025      விளையாட்டு
Harmanpreet-Kaur 2023-07-23

Source: provided

இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சதம் அடித்தார். அவரது 7-வது (149-வது போட்டி) செஞ்சூரியாகும். அவர் 84 பந்தில் 102 ரன்னும் (14 பவுண்டரி), ஜெமீமா ரோட்ரிக்ஸ் 45 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி), ஸ்மிருதி மந் தனா, ஹர்லீன் தியோல் தலா 45 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து 49.5 ஓவரில் 305 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இங்கிலாந்தில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதித்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று இருந்தது. 

________________________________________________________________________________________________

முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.  இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டொமோகா மியாசகி உடன் மோதினார். இதில் முதல் செட்டை 21-15 என பி.வி.சிந்து கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை 21-8 என 2வது செட்டை வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-17 என பி.வி.சிந்து வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

________________________________________________________________________________________________

லாய்டு, பரூக் பெயரில் ஸ்டேண்ட்

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்வையிடும் கேலரியின் ஒரு பகுதிக்கு (Stand) பரூக் இன்ஜீனியர், கிளைவ் லாய்டு எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதை இருவரும் திறந்து வைத்தனர். மேலும், மணி அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர். பரூக் இன்ஜினீயர் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்கான 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம், 16 அரைசதங்களுடன் 2611 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.08 ஆகும். 121 அதிகபட்ச ஸ்கோராகும்.

கிளைவ் லாய்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆவார். இவர் 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதம், 39 அரைசதங்களுடன் 7515 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 46.67 ஆகும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 242 ரன்கள் அடித்துள்ளார். 87 ஒருநாள் போட்டியில் ஒரு சதம், 11 அரைசதங்களுடன் 1977 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 39.54 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 102 ஆகும். டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

________________________________________________________________________________________________

ஆஸி.க்கு 2-வது வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி தொடரை முழுமையாக வென்ற ஆஸ்திரேலிய அணி டி20 முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 2 வது போட்டி கிங்ஸ்டன் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. 

ஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஸாம்பா 3 விக்கெட்டுகளும், நாதன் எல்லீஸ், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளும், துவார்ஷியஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் மேக்ஸ்வெல் 12 ரன்களில் (ஒரு பவுண்டரி - ஒரு சிக்ஸர்) ஹோல்டரிடமும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 21 ரன்களில் (ஒரு பவுண்டரி - 2 சிக்ஸர்) அல்ஜாரி ஜோசப்பிடமும் வீழ்ந்தனர். இறுதியில் 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி, 173 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து