முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்டகால ஆல்ரவுண்டராக உருவெடுப்பார் வாஷிங்டன் சுந்தர்: ரவி சாஸ்திரி நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      விளையாட்டு
Ravi-Shastri 2023 04 12

Source: provided

மும்பை : இந்திய அணியின் அடுத்த நீண்ட கால ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவெடுப்பார் என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 4-வது டெஸ்ட்... 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று (ஜூலை 23) தொடங்குகிறது.

அனைத்துப் பண்புகளும்... 

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் அடுத்த நீண்டகால ஆல்ரவுண்டராக உருவெடுக்கும் அனைத்துப் பண்புகளும் வாஷிங்டன் சுந்தருக்கு இருப்பதாக நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

சரியான ஆல்ரவுண்டர்...

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் எப்போதும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருப்பதை விரும்புகிறேன். அவரை முதல் நாள் பார்த்தவுடன், இந்திய அணிக்கான சரியான ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் என்பதைக் கூறினேன். இந்திய அணிக்காக பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆல்ரவுண்டராக செயல்படும் பண்புகள் அனைத்தும் அவருக்கு இருக்கிறது. வாஷிங்டன் சுந்தருக்கு 25 வயதுதான் ஆகிறது. அவர் நிறைய டெஸ்ட் போட்டிகள் விளையாடியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சிறப்பாக பந்துவீசுகிறார்...

இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் அவர் மிகுந்த அபாயகரமான பந்துவீச்சாளராக இருப்பார். அவர் மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் இயல்பாகவே திறமைவாய்ந்த பேட்டர். அவர் 8-வது இடத்தில் களமிறக்கப்படாமல், 6 இடத்தில் களமிறக்கப்படலாம். அவர் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறார். வெளிநாட்டு ஆடுகளங்களிலும் அவர் சிறப்பாக பந்துவீசுகிறார் என்றார்.

30 விக்கெட்...

25 வயதாகும் வாஷிங்டன் சுந்தர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 545 ரன்கள் மற்றும் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து