முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் பிரம்மாண்ட சிலைகள் : பிரதமர் நரேந்திரமோடி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      தமிழகம்
Modi-3 2025-07-27

Source: provided

அரியலூர் : பிரிட்டனுக்கு முன்பாகவே சோழர்கள் குடவோலை முறையில் ஆட்சி செய்தனர்  என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில், மத்​திய கலா​ச்சா​ரத் துறை சார்​பில் நடை​பெற்ற முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி  கலந்து கொண்டார்.

விழாவில்  அவர் பேசியதாவது:  140 கோடி இந்தியர்களின் நலனுக்காகவும், இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலில் நான் பிரார்த்தனை செய்தேன்.  சோழ மன்னர்கள் இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளுடன் தங்கள் ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை கணிசமாக மேம்படுத்தினர்.  

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சோழப் பேரரசில் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிரிட்டனுக்கு முன்பாகவே சோழர்கள் குடவோலை முறையில் ஆட்சி செய்தனர்.  ராஜேந்திர சோழன் கங்கை நதிநீரை கொண்டு வந்தார். இன்று மீண்டும் காசியிலிருந்து கங்கை நீர் இங்கு கொண்டுவரப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  

இன்று உலகமே நிலையற்ற தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளால் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தீர்வுகளுக்கான பாதையை சைவ சிந்தாந்த கொள்கைகள் நமக்குக் காட்டுகின்றன. அன்பே சிவம் என்ற திருமூலரின் கருத்தை உலகம் ஏற்றுக்கொண்டால், பெரும்பாலான நெருக்கடிகள் தானாகவே தீர்க்கப்படும்.  

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை யாராவது தாக்கினால், இந்தியா அதன் சொந்த மொழியில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை ஆபரேஷன் சிந்தூரின் போது உலகம் கண்டது. அது இந்தியாவின் வலிமையையும் உறுதியையும் உலகமே ஒப்புக்கொள்ள வைத்துள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து