முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் : திருமாவளவன் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Thirumavalavan-1 2024-06-21

Source: provided

சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்ட வேண்டும் என   திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: தமிழகத்தில் சனாதனமயமாக்க பா.ஜ.க. முயன்று வருகிறது. பா.ஜ.க.விற்கு உறுதுணையாக தமிழகத்தில் உள்ள சில கட்சிகளும் உள்ளன. பா.ஜ.க. தமிழக கட்சிகளுடன் இணைந்து நடமாட தொடங்கிய பின் ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது. கவின் ஆணவ கொலை தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். நெல்லை ஆணவ படுகொலையை கண்டித்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பேசவில்லை. ஏதும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் நடத்த கூட மத்திய அரசு தயாராக இல்லை.  பீகாரில் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

வட மாநிலத்தை சேர்ந்த 80 லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறி உள்ளனர். அவர்களை எல்லாம் இங்கே வாக்காளர்களை சேர்க்கும் முயற்சியும் அவர்களது செயல்திட்டத்தில் இருப்பதாக சொல்லபடுகிறது. எனவே இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு விரிவான விவாதத்தை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து