Idhayam Matrimony

வனப்பகுதிக்குள் ஆடு, மாடுகளை மேய்த்து சீமான் நூதன போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Seeman 2024-03-22

Source: provided

தேனி : தேனி மாவட்டம் முந்தல் பகுதியில், கால்நடை மேய்ச்சல் நில உரிமை கோரி, போலீசாரின் தடையை மீறி விவசாயிகளுடன் இணைந்து சீமான், வனப்பகுதிக்குள் ஆடு, மாடுகளை மேய்த்து நூதன போராட்டம் நடத்தினார்.

தேனி மாவட்டம் போடி, முந்தல் அருகே அடவுப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற சீமான் பேசியதாவது: இலங்கையில் எங்களை குண்டு போட்டு கொன்றார்கள், அது இனப்படுகொலை. இங்கு குடிக்க வைத்து கொல்கிறான், இதுவும் இனப்படுகொலை. அவன் ஒன்றரை லட்சம் பேரை ஒரே ஆண்டில் கொன்றான். இவர்கள் 5 லட்சம் பேரை 5 ஆண்டில் கொல்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான். இந்த நாட்டை உலகத்தின் தலை சிறந்த நாடாக, பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம். 5 ஆண்டுகளில் ஆக சிறந்த நாடாக மாற்றுவேன். அவ்வளவு திட்டங்கள், சிந்தனைகள் எல்லாம், கோடி கனவுகள் கொண்டோம்.

அதனை நிறைவேற்ற கூடி வாருங்கள், ஓடி வாருங்கள் என் மக்களே. அவங்களுக்கு தெரியாது. ஆடு, மாடு என்றால் என்ன என்று நினைத்து கொண்டு இருக்கிறான். ஆடு, மாடுகள் மேய்ப்பது தொழில்முறைகள் அல்ல; எங்களது வாழ்க்கை முறை, கலாசாரம், பண்பாடு.

மாட்டுப்பொங்கல் என்று கொண்டாடிய பரம்பரை நாங்கள். கூரிய கொம்புகள் இருப்பதை மறந்து மாடுகள் வண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன; மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மேய்ச்சல் நிலம் என்பது எங்களது உரிமை. ஜாதி, மதம் கொடிய நோய், அது நம்மை பிரிக்கும். ஆனால் மொழி உணர்வே நம்மை இணைக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து