முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் : மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-2 2025-08-08

சென்னை, தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது. சமத்துவ கல்வியை உருவாக்குவோம், அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம், பாகுபாட்டை நீக்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஐகோர்ட் நீதிபதி....

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி ஐகோர்ட் நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறிந்து, கல்விக் கொள்கையை இந்த குழுவினர் வடிவமைத்தனர்.

முதல்கட்டமாக... 

மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1-ம் தேதி தமிழக அரசிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று வெளியிட்டார். பள்ளி படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை தாய்மொழி வழியிலான கல்வி அவசியம் என குழு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொண்டாட தயார்....

மாநில கல்விக்கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- பள்ளிக்கல்வி வரலாற்றில் இது சிறப்பு விழா, எந்த மாநிலத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா எடுக்கப்படுவதில்லை. இந்த வயதில் வாழ்க்கையை அனுபவிக்கலாம், நன்றாக படித்து சாதிக்கவும் செய்யலாம். பள்ளி மாணவர்கள், இளைஞர்களை பார்த்தாலே புதிய உற்சாகம் பிறந்து விடுகிறது. மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை கூறி வருகிறேன். நீங்கள் தான் ரியல் ஹீரோ...உங்களை தூக்கி வைத்து கொண்டாட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சமத்துவ கல்வியை... 

தமிழகத்திற்கு என்று தனி சிந்தனை உள்ளது, சிந்தித்து செயல்படும் வகையில் கல்வி திட்டம் உருவாக்கம். அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பை முடித்து உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் விழுக்காடு 75 சதவீதமாக உள்ளது. 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே இலக்கு. சமத்துவ கல்வியை உருவாக்குவோம், அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம், பாகுபாட்டை நீக்குவோம். உங்கள் நண்பர்கள் யாராவது படிப்பை தொடராமல் இருந்தால் அவர்களை மீண்டும் படிக்க சொல்லுங்கள். மனப்பாடம் செய்வதை விட சிந்தித்து கேள்வி கேட்கும் மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். படிப்பவர்களாக மட்டுமின்றி படைப்பாற்றல் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கவுள்ளோம்.

பாகுபாடே இல்லை...

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை கல்வி அனைவருக்கும் பொதுவானது; அங்கு யாருக்கும் பாகுபாட்டுக்கே இடமில்லை. அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் கல்வியில் நுழைவதை அனுமதிக்க மாட்டோம் பிற்போக்கு சிந்தனை இல்லாமல் முற்போக்காகவும் பகுத்தறிவாகவும் கல்வி இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது. 

ஸ்மார்ட் வகுப்பறைகள்... 

கல்வியுடன் உடற்பயிற்சியும் இணைக்கப்படும். தாய் மொழி, அதாவது தமிழ் மொழி நம் அடையாளமாக பெருமிதமாக இருக்கும். தமிழும் ஆங்கிலமும் தான் உறுதியான கொள்கை. இருமொழி கொள்கை தான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும். பசுமை பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் புதிய மாதிரி வெற்றிப் பள்ளிகள் அமைக்கப்படும். உண்டு உறைவிட பள்ளி உருவாக்கப்படும். கல்வி தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை என்ற நிலையை உருவாக்கும். அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்.

சமத்துவ கல்வியை... 

மதிப்பெண்கள் நோக்கி அல்லாமல் மதிப்பீடுகளை நோக்கி பயணம் அமையும். நான் முதல்வன் திட்டம் வேலைக்கு வழிகாட்டியாக மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும். இவ்வாறு கல்வித்துறையில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வர இருக்கிறோம். நீங்கள் விரும்புகின்ற கல்வியை பெறுவதற்கான வாசலை நமது கல்விக் கொள்கை திறந்து வைக்கும். சமத்துவ கல்வியை உருவாக்குவோம். அறிவு கல்வியை அறிமுகம் செய்வோம், அது பகுத்தறிவு கல்வியாக இருக்கும். மாணவர்கள் உலக அளவில் போட்டி போட வெற்றி பெற இந்த மாநில கொள்கை உதவிகரமாக இருக்கும். கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழகத்தை மேலும் முன்னேற்றுவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து