முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் பாரபட்சமின்றி செயல்பட்டு எல்லா கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சரிசமமாக நடத்துகிறது : தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      இந்தியா
Election Commissioner

Source: provided

புதுடெல்லி : தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று விளக்கமளித்தார். மேலும் பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன என்று தெரிவித்த அவர் எல்லாக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சரிசமமாக நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், இதற்குத் தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. பீகார் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணியிலும் முறைகேடுகள் நடைபெறுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ராகுல் காந்தி இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இவ்விவகாரம் தொடர்பாகப் பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சீராய்வு தேவை என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் எல்லாக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சரிசமமாக நடத்துகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம் உருவாகின்றன. பிறகு, எப்படி அரசியல் கட்சிகளிடையே தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்ட முடியும்?

பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் அரசமைப்பை அவமதிக்கின்றன. அனைத்து மாவட்ட அளவிலும் அனைவரும் இணைந்து செயல்படுகிறோம். வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வெளிப்படையான முறையில் பணியாற்றுகின்றனர்."இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து