முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமாவளவனின் சித்தி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Thiruma 2025-08-17

Source: provided

சென்னை : அரியலூர் மாவட்டம் அங்கனூரை சேர்ந்தவர் திருமாவளவன் (63). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவராகவும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்பியாகவும் இருந்து வருகிறார். இவரது தாயார் பெரியம்மாவின் தங்கை செல்லம்மா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஆக.17) காலை செல்லம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் திருமாவளவன் வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் அங்கனூரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அரசியல் கட்சியின் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. நேற்று திருமாவளவனுக்கு பிறந்த நாள் என்பதால் நிர்வாகிகள் பல்வேறு கிராமங்களிலும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த நிலையில், அவரது சித்தி செல்லம்மா மறைவையொட்டி அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே திருமாவளவனின் சித்தி மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "அன்புச் சகோதரர் தொல். திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தபோது, தனது சிற்றன்னையின் மறைவு குறித்துத் தெரிவித்தார்.

சிற்றன்னையின் மீதான அவரது பாசப்பிணைப்பையும் - அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும் - உள்ளத்தில் நிறைந்திருந்த சோகத்தையும் உணர்ந்து கண்கள் கலங்கினேன். அன்புச் சகோதரர் அவர்களுக்கும் - அவரது குடும்பத்தினருக்கும் - உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து