முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரிக்கான பல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கப்பட்டவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM 2024-12-02

Source: provided

தருமபுரி : தருமபுரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதல்வர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தருமபுரியின் வளர்ச்சி என்றாலே அது தி.மு.க. ஆட்சியில் தான். தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தருமபுரி தொழிற்பேட்டை தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.இணையத்தில் விண்ணப்பித்த அன்றே விவசாய கடன் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் வேளாண் பெருங்குடி மக்களுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சியில் வேளாண் மக்களளுக்கு ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரியில் பேருந்து வசதி இல்லாத 8 கிராமங்கள் போக்குவரத்து வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 புதிய பேருந்துகள் இயக்கம்.தருமபுரியில் 2.87 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர். 

தருமபுரி சிப்காட் பூங்கால் தொழில்முனைவோருக்கு 200 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. 63 மலைக்கிராம பழங்குடியின மக்கள், பொதுமக்கள் வசதிக்காக சித்தேரி ஊராட்சி அரூர் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படும். நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ரூ.7.5 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். புளி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தருமபுரியில் ரூ.11 கோடியில் புளி வணிக மையம் அமைக்கப்படும்.ஒகேனக்கல்- தருமபுரியை இணைக்கும் சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து