முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் மாபெரும் பேரணியை தொடங்கினார் ராகுல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      இந்தியா
Rahul 2025-08-17

Source: provided

டெல்லி : வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் மாபெரும் பேரணியை ராகுல்காந்தி நேற்று தொடங்கினார்.

பீகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தநிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பீகாரில் மாபெரும் பேரணியை நேற்று (ஆக. 17) தொடங்கின.

‘இன்டியா’ கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இணைந்து, நேற்று முதல் மாநிலம் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மேற்கொள்கிறாா். இதன் தொடக்க விழாவில் மேடையில் பேசிய ராகுல் காந்தி: “மகாராஷ்டிரத்தில் இண்டியா கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் தெரிவிக்கப்பட்டன. ஆனால், தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்தது. அதிலும், பா.ஜ.க.வுக்கு ஒரு கோடி புதிய வாக்காளர்கள் கிடைத்தனர்.

உண்மை என்னவென்றால், ஒட்டுமொத்த நாட்டிலும் வாக்குத் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்னும் பெயரில், அவர்கள் புதிய வாக்காளர்களை சேர்க்க விரும்புகிறார்கள். அதன்மூலம், வாக்குகளை திருடுகிறார்கள். பீகாரில், வாக்குத் திருட்டை அனுமதிக்கமாட்டோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து