முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறப்பு : கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      தமிழகம்
RN-Ravi 2025-08-17

Source: provided

சென்னை : சந்த் ஸ்ரீ மவுலி த்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற கவர்னர் ஆர். என்.ரவி, வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறப்பு என்று தெரிவித்துள்ளார்.

விஷ்வ வாரகரி சந்த்ஸ்ரீ ஞானேஸ்வர் மகராஜ் மற்றும் வாரகரி சந்துக்களின் ஆன்மிக பாரம்பரியத்தை உலக அளவில் பரப்பும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் சந்த் ஸ்ரீ மவுலித்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழா, சென்னை அடையார் அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் காஞ்சி மகாஸ்வாமி அனந்த மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவிபேசியதாவது: பாரதம் உலகை இயக்கும் உயிர்சக்தி என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். தர்மத்தில் நம்முடைய ஈடுபாடு சேரும்போது இந்த ஆற்றல் அதிகரிக்கிறது. பாரதம் சனாதன தர்மத்தின் காலமற்ற மகத்துவத்தை போற்றி வருகிறது. அறிவால் பிறந்த ஒரே புண்ணிய பூமி நம் பாரதம்தான். இந்தியா முழுவதும் குருநானக், நர்சிங் மேத்தா, ரவி தாஸ், துளசி தாஸ், சங்கர் தேவ், ஜெயதேவர், சைதன்ய பிரபு, ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் பக் தர்கள் மனதில் ஞானத்தையும் பக்தியையும் பதிய வைத்தனர். கலாச்சாரம் மக்கள் மனங்களில் வாழ்கிறது. அது அமைப்புகள், கட்டிடங்களில் மட்டும் இல்லை.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறப்பு, பலமொழிகள், பல பழக்கவழக்கங்கள் என்று இருந்தாலும் மக்கள் மனதில் ஒற்றுமை உணர்வு இருக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்பதை மகா உபநிஷதம் வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்று குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து