முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.11 ஆயிரம் கோடி பிரமாண்ட நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      இந்தியா
Modi 2024-09-15

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பில் 2 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

டெல்லியின் துவாரகா விரைவுச்சாலையின் 10.1 கி.மீ நீளமுள்ள டெல்லி பிரிவு சுமார் ரூ.5,360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.  இது, 5.9 கி.மீ. ஷிவ் மூர்த்தி சந்திப்பிலிருந்து துவாரகா செக்டார்-21 வரையிலும், 4.2 கி.மீ. துவாரகா செக்டார்-21 ஐ டெல்லி-ஹரியானா எல்லையுடன் இணைக்கும்.

அலிப்பூர் முதல் டிச்சான் கலான் வரையிலான நகர்ப்புற விரிவாக்க சாலை- பகுதி 2 ஆகும்.  இது பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் சுமார் ரூ. 5,580 கோடி செலவில் கட்டப்பட்டது.  இந்த 2 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

துவாரகா விரைவுச் சாலையால், நொய்டா- டெல்லி விமான நிலைய பயண நேரம் 20 நிமிடமாக குறையும். நெடுஞ்சாலை அமைக்க பணியாற்ற தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர்  அதிகாரிகள் நெடுஞ்சாலைகள் சிறப்பு குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து