முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் விரைவில் முடியும் தருவாயில் உள்ள 24 ரயில் நிலைய பணிகள்: பிரதமர் திறந்து வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Modi 2025-08-17

Source: provided

சென்னை, : தமிழகத்தில் மொத்தம் 24 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி இந்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது. அடுத்த மாதம் இந்த ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் 115 ரயில் நிலையங்களில் மறுசீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மறுசீரமைப்பு பணிகள் முடிந்த இந்த ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த ரயில் நிலையங்களில் புதிய முன்பதிவு அலுவலகம், நடைமேடை தளம் சீரமைப்பு, நடைபாதைகள், பார்க்கிங் வசதி, லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் உள்பட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையம் ரூ.10.68 கோடி மதிப்பிலும், மாம்பலம் ரயில் நிலையம் ரூ.8.70 கோடி மதிப்பிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் ரூ.14.8 கோடி செலவிலும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு பணி நடைபெறும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தெற்கு ரயில்வேயில், சென்னை கோட்டத்தில் பூங்கா, மாம்பலம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களும், சேலம் கோட்டத்தில் சின்னசேலம், பொம்மிடி, உதகமண்டலம், மொரப்பூர், மதுரை கோட்டத்தில் காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சி கோட்டத்தில் வேலூர் கண்டோன்மெண்ட், அரியலூர், திருவாரூர் ஜங்சன், தஞ்சாவூர் ஜங்சன், பாலக்காடு கோட்டத்தில் பொள்ளாச்சி ஜங்சன், குட்டிபுரம், காசர்கோடு, பெரூக், சொர்ணூர், திருவனந்தபுரம் கோட்டத்தில் திருப்புனித்துரா, சங்கனாச்சேரி, சாலக்குடி, வடக்கஞ்சேரி என மொத்தம் 24 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி இந்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது. அடுத்த மாதம் இந்த ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து