Idhayam Matrimony

தொடர்ச்சியாக 9 வெற்றிகள்: டி-20 போட்டியில் ஆஸி., சாதனை

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Australia 2024-03-19

Source: provided

மெலபோர்ன் : டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்து ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.

சுற்றுப்பயணம்... 

தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி-20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி-20 போட்டி டார்வினில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

தொடர் வெற்றிகள்...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் இடைவெளியில் டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக 8 வெற்றிகள் பெற்றிருந்ததே ஆஸ்திரேலிய அணி இதுவரையில் தொடர்ச்சியாக பெற்றிருந்த அதிக வெற்றிகளாக இருந்தது வந்தது. ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டி இன்று (ஆகஸ்ட் 12) நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து