Idhayam Matrimony

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது ஒரு ஜனநாயக படுகொலை : உத்தவ் தாக்கரே கண்டனம்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      இந்தியா
Uddhav-thackeray

Source: provided

டெல்லி : எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதால் ஜனநாயகத்தின் படுகொலையை உலகம் கண்டுள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. முக்கியமாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் பீகார் மாநில எஸ்.ஐ.ஆரை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் நோக்கி பேரணி சென்றனர். பேரணியின்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பேரணியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், உலகம் ஜனநாயகத்தின் படுகொலையை கண்டுள்ளது உன சிவசேனா  தலைவர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் அரசு ஏன் தலையீடு செய்கிறது என்பதற்கு, இது தற்போதைய சாட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து