முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை வரவேற்றார் துணை முதல்வர் உயதநிதி

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      தமிழகம்
DCM 2025-09-02

Source: provided

சென்னை : 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரெளபதி முர்மு, அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 11.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி முர்முவை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120 ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் திரெளபதி முர்மு பங்கேற்றார். விழாவில் திரெளபதி முர்மு பேசியதாவது:- கிராமப்புற மக்கள் வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்களிப்பு வழங்குகின்றன. கிராமப்புற மக்கள் வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்களிப்பு வழங்குகின்றன என்றார்.

விழாவில் முன்னதாக பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சுதந்திரத்திற்கு முன் சிட்டி யூனியன் வங்கி தொடங்கப்பட்டது. அதன் 120-ம் ஆண்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி. தேசிய வளர்ச்சியை கட்டமைக்க தனியார் வங்கியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அரசமைப்பை உருவாக்கியவர்கள் நீதித்துறைக்கு மறு ஆய்வு செய்யும் அதிகாரத்தை வழங்கி உள்ளனர்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீத ஆக உயர்ந்துள்ளது. தேசிய வளர்ச்சியை கட்டமைக்க தனியார் வங்கியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறும் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டனர். பாஜக நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி., அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கவர்னர் மாளிகையில் இன்றிரவு ஓய்வெடுக்கும் ஜனாதிபதி, இன்று காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சி சென்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். அதனை தொடர்ந்து திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சென்று 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறாா். இதனையொட்டி, சென்னை, திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல்துறையினர் பல அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து