முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றும் : மத்திய அமைச்சர் அஸ்வினி கருத்து

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025      இந்தியா
Ashwini-Vaishnav 1

Source: provided

புதுடெல்லி : நவராத்திரி முதல் அமலுக்கு வர உள்ள ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, இந்திய பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “2014-க்கு முன்பு, வரி விதிப்பு முறை மிகவும் சிக்கலானதாக இருந்தது. பல நிலைகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. அதை எளிதாக்கியது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தம், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.

தினசரி பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. சுதந்திரதினத்தன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. நவராத்திரி முதல் நாள் முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து மாற்றங்களும் நடைமுறைக்கு வரும்.

ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் இந்தியாவின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும். தூய பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூ.3.30 லட்சம் கோடியாக உள்ளது. இதில், ரூ.2.02 லட்சம் கோடி நமது நுகர்வு. இந்த நுகர்வில் 10% அதிகரித்தாலும் கூடுதலாக ரூ. 20 லட்சம் கோடி நுகர்வு அதிகரிக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும். நுகர்வு நேர்மறையான முறையில் அதிகரிக்கும். இது பொருளாதாரத்தில் ஒரு நல்ல சுழற்சியை உருவாக்கும்" என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து