Idhayam Matrimony

லோகா - அத்தியாயம் 1 சந்திரா, படத்தின் வெற்றி விழா

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2025      சினிமா
Loka-Chapter-1-Chandra 2025

Source: provided

துல்கர் சல்மானின் வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’. டொம்னிக் அருண் இயக்கியிருக்கும் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். மலையாளம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை கடந்து தற்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக்குழு பல்வேறு இடங்களுக்கு சென்று ரசிகர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்யாணி பேசுகையில், 100 கோடி வசூலித்துள்ளதற்கு நான் மட்டுமே காரணமில்லை. மொத்த குழுவின் உழைப்பு தான் காரணம் என்றார்..  அதனைத் தொடர்ந்து பேசிய, துல்கர் சல்மான், கல்யாணியை தவிர  இந்தப்படத்திற்கு வேறு யாருமே செட் ஆகமாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக இருந்தார். இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்று நாங்களே  எதிர்பார்க்கவில்லை. இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன், இந்த அளவு கிரேஸை இதுவரை பார்க்கவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து