Idhayam Matrimony

காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2025      சினிமா
Gandhi-Glass 2025-09-08

Source: provided

ஜமீன் குடும்பத்தை உதறிவிட்டு காதல் மனைவி அர்ச்சனாவுடன் சென்னைக்கு வருகிறார் பாலாஜி சக்தி வேல். மனைவியின் 60 வது திருமண நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக நிகழ்ச்சி வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வரும் நாயகன் பாலாவை சந்திக்கிறார். கேட்ட பணத்துக்கு மேலாக கிடைத்த மகிழ்ச்சியில் பாலாவும், மனைவியின் ஆசையை நிறைவேற்ற போகிறோம் என்ற மகிழ்ச்சியில் பாலாஜி சக்திவேலும் இருக்க, அவர்களிடம் இருக்கும் பணம் திடீரென செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகிறது. இந்த நிலையில், பாலாஜி சக்திவேல் - அர்ச்சனா 60 வது கல்யாணம் நடந்ததா இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்து உணர்வுப்பூர்வமாக சொல்லும் படந்தான் ‘காந்தி கண்ணாடி’. பாலாவுக்கு இது முதல் படம் என்றாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். பாலாஜி சக்திவேல் - அர்ச்சனாவின் அனுபவ நடிப்பு படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. நாயகி நமிதா கிருஷ்ணமூர்த்தி, கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார். விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உயிரோட்டமாக பயணித்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் ஷெரிப், இளமையில் மட்டும் இன்றி 60 வயதை தாண்டியும், அன்பை வெளிப்படுத்துவது தான் உண்மையான காதல் என்பதனை சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில் காந்தி கண்ணாடியை ஒரு முறை போட்டுப் பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து