முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுயமரியாதை கொள்கையில் நான் முதலீடு செய்து வந்திருக்கிறேன்: செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வர் பதில்

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-2-2025-09-08

சென்னை, தனது வெளிநாடு பயணம் குறித்து இ.பி.எஸ். திரித்து கூறியுள்ளதாக குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாடுகளில் சுயமரியாதை கொள்கையில் நான் முதலீடு செய்து வந்திருக்கிறேன் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

வெளிநாடு பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அந்த கேள்வி, பதில் வருமாறு:-

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உங்களுடைய வெளிநாட்டு பயணம் என்பது உங்களுடைய முதலீட்டிற்காக நடத்தினார் என்ற விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அதை பற்றி…

முதல்வர் பதில்: “ஒரு வகையில் அவர் சொல்வது முதலீடு செய்யப்போனதைப்பற்றி திரித்து சொல்லியிருக்கிறார். என்னைப்பொருத்தவரை சொல்ல விரும்புவது, சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். தந்தைப் பெரியாரின் உணர்வுகளை பெரியாரைப் பற்றி அந்த நாட்டில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். அதுதான் உண்மை. அந்த அடிப்படையில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.”

கேள்வி: அ.தி.மு.க.-வின் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டுள்ளது இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?

முதல்வர் பதில்: “ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த அக்கபோரான கேள்விகளையெல்லாம் கேட்கிறீர்களே.”

கேள்வி: தமிழர்களை சந்தித்தீர்கள். தமிழர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளீர்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது. அவர்களுடைய ஆர்வம் என்னவாக இருக்கிறது. அது பற்றி…

முதல்வர் பதில்: “அளவு கடந்த ஆர்வமாக இருக்கிறார்கள். ஏற்கெனவே தெளிவாக சொல்லியிருக்கிறேன். மிகவும் போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்கள். அந்த நிலையை நேரடியாக நாங்கள் பார்த்தோம்” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து