முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026 டிசம்பர் முதல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      தமிழகம்
Isro

Source: provided

குமரி : குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு பூம்புகார் படகு துறையில் இருந்து தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டார். பிறகு அங்கிருந்து கண்ணாடி நடைபாலம் வழியாக நடந்து சென்று கடலின் அழகை ரசித்ததோடு திருவள்ளுவர் சிலையையும் பார்த்து வியந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து ரூ.10 ஆயிரத்து 360 கோடியில் இந்தியாவில் உருவாக்கிய செயற்கைகோள் கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் ஆண்டின் 365 நாளும் துல்லியமாக செயல்பட்டு 12 நாளுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து கண்காணித்து பேரிடர், காலநிலை போன்ற தகவல்களை செயற்கைக்கோள் மூலம் அனுப்ப முடியும். இது இந்திய மக்களுக்கு பெருமிதமான தருணம். 

ரூ.1000 கோடியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் விரைவில் குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ளது. இதற்காக தமிழக அரசின் முயற்சியோடு 2,300 ஏக்கர் நிலம் இஸ்ரோ பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து 500 கிலோ எடையுள்ள செயற்கை கோளுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படும். விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் நன்றாக உள்ளது. தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து