முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் எலக்ட்ரிக் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுச்சேரி, புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பேருந்துகளை கடந்த அக்.27-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இயக்கி வைத்தனர். புதுச்சேரியின் கிராமப்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டதால் பொதுமக்களிடையே எலக்ட்ரிக் பேருந்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், ஊதிய நிரந்தரம், தமிழகத்தில் மின்சார பேருந்து ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தினப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மின்சார பேருந்து ஊழியர்கள் நேற்று காலை முதல் பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் தவிர, வெளியில் இருந்து தற்காலிக பணியாளர்களாக 75 ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மாதம் ரூ.21,000 ஊதியம் என கூறப்பட்ட நிலையில், பிடித்தம் போக ரூ.17,000 மட்டுமே வழங்கப்பட்டதாக ஓட்டுநர்கள் கூறினர். மின்சார பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டு 10 நாள்களே ஆன நிலையில் ஊதிய நிரந்தரம் கோரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருது புதுச்சேரி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து