முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எண்.07103/07104) இயக்கப்படும் என கடப்பா ரயில்வே முதுநிலை வணிக ஆய்வாளர் ஏ.ஜனார்தன் தெரிவித்துள்ளார் . இந்த ரயில் வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 5, 12, 19 மற்றும் ஜனவரி 9, 16, 2026) காலை 11 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தில் இருந்து புறப்படும். அதிகாலை 3.25 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும். இது அதே நாளில் இரவு 10 மணிக்கு காட்பாடி, ஜோலர்பேட்டை வழியாக கொல்லத்தை அடையும்.

கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, ஜனவரி 11, 18, 2026) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும். அதே நாளில் இரவு 9.50 மணிக்கு ரேணிகுண்டாவையும், 10.36 மணிக்கு கோடூரையும், 11.08 மணிக்கு ராஜம்பேட்டையையும், 11.53 மணிக்கு கடப்பாவையும் சென்றடையும். இது நள்ளிரவு 12.28 மணிக்கு எர்ரகுன்லாவையும், மதியம் 12.53 மணிக்கு புரோட்டாத்தூரையும் சென்றடையும். பயணிகளின் வசதிக்காக ஆந்திரா மற்றும் கேரளா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து