முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      இந்தியா
Syrup

புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.

மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கலப்பட இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் நச்சுப்பொருட்கள் அதிகளவில் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மருந்தை தயாரித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்கள் சில இருமல் மருந்துகளை தடை செய்துள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு ஒரு மருத்துவ எச்சரிக்கையை வெளியிட்டது. இது போன்ற இருமல் மருந்துகளின் விநியோகத்தை முறையாக கண்காணிக்காமல் இருப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். என தெரிவித்தது. இந்த நிலையில், மருத்துவர் பரிந்துரை இன்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது என்றும், மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும் எனவும் புதிய கட்டுப்பாடு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

தற்போது உள்ள விதிகளின்படி மருந்து விநியோகிப்பதற்கான உரிமம் இன்றி இருமல் மருந்தை விற்பனை செய்ய முடியும். வரவிருக்கும் புதிய கட்டுப்பாடுகளின்படி, மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்ய முடியும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து