முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா: 6 மாவோயிஸ்டுகள் டுகொலை

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      இந்தியா
Militry 2025-11-18

Source: provided

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் நடந்த பாதுகாப்பு படையினருடனான மோதலில் 6 மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆந்திர பிரதேசத்தில் ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் மரேதுமிலி வன பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறப்பு பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் படையினரும் பதிலடி தாக்குதலை தொடுத்தனர்.

இந்த மோதலில் 6 மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு அமித் பர்தார் கூறும்போது, பாதுகாப்பு படையினருடனான மோதலில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. துப்பாக்கி சூட்டின்போது போலீசார் யாரும் பாதிக்கப்படவில்லை. கூடுதல் படைகளை நாங்கள் களமிறக்கி இருக்கிறோம் என கூறினார்.

கடந்த 6 மாதங்களில் நடந்த 2-வது பெரிய என்கவுன்ட்டர் சம்பவம் இதுவாகும். இந்த ஆண்டின் மே 7-ந்தேதி ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் உள்ள ராமவரம் வன பகுதியில் நடந்த போலீசாருடனான மோதலில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து