முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராக உத்தரவு

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      தமிழகம்
Polachi-1 2023 05 13

Source: provided

கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு கோவை மகளிர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கடந்த மே மாதம் 13-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தீர்ப்பை எதிர்த்து 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய சி.பி.ஐ. வக்கீல் சுரேந்திரமோகனை, ஐகோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து