முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு நெருக்கடி: சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமார் கைது

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      இந்தியா
Sabarimala 2024-11-5

Source: provided

சபரிமலை : சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கில்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமாரை போலீசார் கைது செய்தனர். பத்மகுமார் கைது ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு பராமரிப்பு பணி என கூறி துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவுநிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது. தங்க கவசத்தை தாமிர கவசம் என கூறி திட்டமிட்டு கொள்ளையடித்த பகீர் சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் அப்போதைய அதிகாரிகள் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான பொறுப்பில் இருந்தவர்கள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றியுடன் சேர்ந்து கைவரிசை காட்டியது சிறப்பு விசாரணை குழுவின் அதிரடி விசாரணையில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கில் இதுவரை அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் செயல் அதிகாரி சுனீஷ் குமார், முன்னாள் தலைவரும், ஆணையருமான வாசு, திருவாபரண ஆணையர் பைஜு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் அடுத்த கட்டமாக முன்னாள் தேவஸ்தான தலைவரான பத்மகுமாரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணையை சிறப்பு விசாரணை குழுவினர் தொடங்கினர். இதில் அவருக்கும், இந்த தங்கம் அபகரிப்பு வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சசிதரன் தலைமையிலான அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றியுடன் பத்மகுமார் பணப்பரிமாற்றம் செய்திருப்பது விசாரணையில் அம்பலமானது. 

கைதான பத்மகுமார் முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், பத்தனம்திட்டா மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்மகுமார் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து