முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனர்கள் சட்டவிரோத தகவல், படங்களை பதிவிட்டால் தடை: எக்ஸ் தளம் கடும் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      இந்தியா
Elon musk 2023-07-13-

புதுடெல்லி, குரோக் ஏஐ செயலியை பயன்படுத்துபவர்கள் சட்ட​விரோத தகவல்கள் மற்றும் படங்களை பதிவேற்றம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எக்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது கிரோக் ஏ.ஐ. பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்துடன் இணைக்கப்பட்டு கிரோக் ஏ.ஐ. செயல்படுகிறது. எக்ஸ் தள பயனர்கள் சிலர் கிரோக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாக ஆபாசமாக மாற்றி வருகின்றனர். மேலும் அவற்றை எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரவே அது வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது எக்ஸ் தளத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தும் இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டார்.

இந்தநிலையில் எக்ஸ் தளம் கிரோக் ஏ.ஐ.யை பயன்படுத்தி பெண்களின் ஆபாச படங்கள், பாலியல் ரீதியான படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை உருவாக்கியவர்களின் கணக்குகளை தெரிவு செய்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரோக் ஏஐ செயலியை பயன்படுத்துபவர்கள் சட்ட​விரோத தகவல்கள் மற்றும் படங்களை பதிவேற்றம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். சட்ட​விரோத தகவல்கள், படங்கள், வீடியோக்களை பதிவேற்றும் செய்பவர்களின் கணக்குகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து