முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்: தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்காள முதல்வர் கடிதம்

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      இந்தியா
Mamtha 2023 04 22

கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. திருத்தப் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு முதல்வர்  மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், மாநிலத்தில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை நிறுத்தவேண்டும். பெருமளவிலான மக்களின் வாக்குரிமையை இழக்கச் செய்கிறது. இது நாட்டின் ஜனநாயக அடித்தளத்திற்கு சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எஸ்.ஐ.ஆர். பணிகளில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அடிப்படை அரசியலமைப்பை தாக்குகிறது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து