முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் புத்தகத் திருவிழாவை ஜன 8-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த 49-வது புத்தகக் கண்காட்சி, வரும்ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை, வரும் 8ம் தேதி அன்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

புத்தக கண்காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின், ஹார்ப்பர் காலின்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன. வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. தினமும் மாலையில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும்.

இந்த ஆண்டு முதன்முறையாக குழந்தைகளுக்காக தனி பூங்கா மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் கூயிர் பதிப்பகத்திற்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  மேலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளுக்கான வெற்றியாளர்கள் பட்டியலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

அதன்படி, கவிதை - கவிஞர் நா. சுகுமாரன், சிறுகதை -எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, நாவல் -எழுத்தாளர் ரா.முருகன், உரைநடை -பேராசிரியர் பாரதிபுத்திரன் (ச.பாலுசாமி), நாடகம் - கே.எஸ். கருணா பிரசாத், மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்பாளர் வ.கீதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விருதும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து