முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      இந்தியா
Amit-Shah 2

கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.

கேரளாவில் நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா இன்று கேரளா செல்கிறார். கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர் இதுபற்றி குறிப்பிடும்போது, மத்திய கூட்டுறவு துறை அமைச்சர்  அமித்ஷா, வருகிற ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்திற்கு வருகை தந்து, கேரள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் உள்ளிட்ட பணிகளை தொடக்கி வைக்கிறார் என தெரிவித்துள்ளஆர்.

இதன்படி கேரளா வரும் அமைச்சர்  அமித்ஷா, காலையில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதுடன் பூஜையிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதன்பின்னர், கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். இதன்பின்பு, மதியம் கூட்டம் ஒன்றில் பங்கேற்கிறார். அன்று மாலை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்துகிறார் என தகவல் தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து