முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      தமிழகம்
mrk-panneer

கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் கதாநாயகனுக்கும், ஜனநாயகனுக்கும் போட்டி கிடையாது. இது சினிமா அல்ல, ரியல் ஆட்டம். சினிமாவில் வேண்டுமானால் எதுவும் நடக்கலாம். ஜனநாயகன் அதிகாரத்தை நோக்கி வருகிறது. நாங்கள் அதிகாரத்தை நோக்கி வரவில்லை. நாங்கள் மக்களுக்கு பல திட்டங்களை கொண்டுவர போராட்டங்களை நடத்தியுள்ளோம். 

தமிழகம், இந்த அளவுக்கு முன்னேறியதற்கு தி.மு.க.வின் உழைப்பே காரணம். பல போராட்டங்கள், அடக்கு முறைகளை எதிர்த்து ரியலாக போராடிய இயக்கம் தி.மு.க. அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணி என்பது ஒரு பழைய சோறு. தி.மு.க. வலுவான இயக்கமாக உள்ளது. தமிழக அரசின் சாதனைகளை பார்த்து, மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும்.

எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. அந்த கட்சிக்கும் தகுதி இல்லை. மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளன. அதனால் எங்களுடன் கூட்டணி சேர்ந்து, மக்கள் பணியாற்ற பல கட்சிகள் விரும்புகின்றன. அதனால் விரைவில் பல்வேறு கட்சிகள் தி.மு.க.வில் இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து