முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் போக்சோ வழக்கில் சிக்கிய நபர் ஒருவருக்கு அலகாபாத் ஐகோர்ட் ஜாமீன் வழங்கியதுடன், பாதிக்கப்பட்டவருக்கு வயது நிர்ணய சோதனை நடத்தவும் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சய் கரோல், கோடீஸ்வர் சிங் அமர்வு விசாரித்தது.

அப்போது போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், ‘போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து மீண்டும் மீண்டும் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகளை கருத்தில் கொண்டு, இந்தத் தீர்ப்பின் நகலை மத்திய சட்டச் செயலாளருக்கு அனுப்பி, இந்த அச்சுறுத்தலைத் தடுக்க சாத்தியமான நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். 

இதில் முக்கியமாக, உண்மையான இளம் பருவ உறவுகளை பாதுகாக்கும் வகையில், போக்சோ சட்டத்தில் ரோமியோ-ஜூலியட் பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி, பகைமைகளைத் தீர்த்துக்கொள்ள முயல்பவர்கள் மீது வழக்குத் தொடர உதவும் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து