முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      தமிழகம்
Train-2023-05-01

சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இவை ஏ.சி. இல்லாத ரயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் அம்ரித் பாரத் ரயிலானது ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - ஜல்பாய்குரி இடையே அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

ஜல்பாய்குரி - திருச்சி இடையிலான அம்ரித் பாரத் ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக இயக்கப்படும். நாகர்கோவில் - ஜல்பாய்குரி இடையிலான அம்ரித் பாரத் ரயில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, குண்டூர் வழியாக இயக்கப்படும்.

தாம்பரம் - சந்திரகாச்சி இடையிலான அம்ரித் பாரத் ரயிலானது எழும்பூர், சூலூர்பேட்டை, நெல்லூர் வழியாக இயக்கப்படும். அடுத்த வாரம் இந்த ரயில்களின் சேவை தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அம்ரித் பாரத் ரயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம். கண்காணிப்பு கேமரா, தகவல் தொடர்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து