முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கவர்னர் உரையை வாசிக்காமல் ஆர். என். ரவி அவையிலிருந்து வெளியேறினார். சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி கவர்னர் உரையை படித்ததாக, பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இந்த நிலையில், இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'கவர்னர் உரை தேவையில்லை' என அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், “இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'கவர்னர் உரை தேவையில்லை' என அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம். அரசு தயாரித்தளித்த அறிக்கையை கவர்னர் படிக்காமல் வெளியேறுவதால், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது.

அரசியலமைப்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல் மக்கள்நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கிறார் தமிழ்நாடு கவர்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை என்ற நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு, இந்திய பாராளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து