முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உண்மை சீட்டா அழிந்தது யந்திர சீட்டா உயிர் பெற்றது

Image Unavailable

நாம் ஒரு விநோதமான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அறிவியல் தாக்கத்தால் தொழில் நுட்ப மோகத்தில் மூழ்கியுள்ள நவீன யுகம். மறுபுறம் இயற்கை உயிரினங்கள் அழிந்து வரும் அவலம். இரண்டையும் சமநிலைப்படுத்த முடியாமல் மனித குலம் திணறி வருகிறது. உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய உயிரினம் சிறுத்தை இனத்தை சேர்ந்த சீட்டா. ஆனால் இந்தியாவை தாயகமாக கொண்ட சீட்டா கிட்டத்தட்ட அழிந்து விட்டது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட நமது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு வாக்கில் சீட்டா முற்றிலும் வேட்டையாடி அழிக்கப்பட்டிருந்தது. சிவிங்கி என்று அழைக்கப்படும் ஆசிய சீட்டா, இந்தியாவில் 1952க்குப் பின் காணப்படவில்லை. சத்தீஸ்கரைச் சேர்ந்த இராமானுஜ பிரதாப் சிங் என்ற மன்னர் வேட்டைக்குப் பிரபலமானவர். அம்மன்னர், 1,150 புலிகளைக் கொன்றவர். இந்தியாவில் காணப்பட்ட கடைசி சிவிங்கியையும் இவர்தான் கொன்றார். அது கால்நடைகளை தாக்குவதாலும், விவசாயிகளின் அச்சத்தினாலும், முன்பு அரசர்களின் வேட்டையாடுதலுக்கான கவுரவத்தினாலும் இந்த சிறுத்தை இனம் அழிவை சந்தித்துள்ளது. தற்போது அதை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக ஆப்பிரிக்க காடுகளில் இருந்து கொண்டு இந்திய வனங்களில் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரி இப்போ இயந்திர சீட்டாவுக்கு வருவோம். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் இயங்கி வரும் எம்ஐடி யின் கணிணி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தான் தற்போது இந்த இயந்திர சீட்டாவை உருவாக்கியுள்ளது.  தற்போது வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக்ஸ் துறையில் ஆர்வம் காட்டி வரும் இன்றைய உலகில் இந்த இயந்திர சீட்டா மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். இவை மனித குலத்தின் சாதனை என்பதா? இயற்கையை அழித்து விட்டு இயந்திரங்களை நோக்கி ஓடும் ஓட்டத்தை வேதனை என்பதா?  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்