முக்கிய செய்திகள்
முகப்பு

தெரு நாய்களின் சொர்க்கம் எனப்படும் கிராமம் எங்குள்ளது தெரியுமா

dogs 2022 01 06

கோஸ்டா ரிக்கா நாட்டில் உள்ள சான்டா பார்பரா என்ற மலையில் அமைந்துள்ளது Territorio de Zaguates என்ற மலைக்கிராமம். இதன் பொருள் தெரு நாய்களின் சொர்க்கம் என்பதாகும். இங்கு ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் எதற்கு வருகின்றனர் தெரியுமா.. இங்குள்ள சான்டா பார்பரா மலையை பார்ப்பதை காட்டிலும் இந்த கிராமத்தை பார்க்கத்தான் வருகிறார்கள். இதில் அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. நாய்களின் சரணாலயம், நாய்களின் புகலிடம், நாய்களின் சொர்க்கம் எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அத்தனை வகையான நாய்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

இங்கு மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரமாக சுற்றி திரியும் வகையில் பராமரிக்கப்படுகின்றன. கலப்பின நாய்கள், நாட்டு நாய்கள், உயர் ரக நாய்கள் என பல்வேறு வகையான நாய் இனங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. ஒரு தனியார் தன்னார்வ நிறுவனத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமம் நாய்களுக்காக நிர்வகிக்கப்படுகிறது.

இங்கு நாய்ளுக்கு தேவையான அனைத்து உணவு, மருந்து, நீச்சல் போன்ற பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான நாய்கள் அந்த மலை கிராமத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. சில அரிய வகை நாய் இனங்களும் இங்குள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்: