முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

100 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பேர் வசிக்கும் அதிசய சிற்றூர்

Image Unavailable

இத்தாலியில் உள்ள சுமார் 1765 பேர் வசிக்கும் சிற்றூர் ஒன்றில் 10 க்கும் மேற்பட்டோர் தங்களது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளனர். இத்தாலியில் உள்ள சர்தினியா என்ற தீவில் அமைந்துள்ள பெர்தாஸ்தேபோகு (Perdasdefogu) என்ற சிற்றூர்தான் அந்த பெருமைக்குரிய இடமாகும்.

உலகில் 100 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் பேர் வசிக்கும் 5 இடங்களில் சர்தினியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு 1 லட்சம் குடியிருப்பு வாசிகளில் சுமார் 33.6 சதவீதம் பேர் 100 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த ஊர் கின்னஸில் இடம் பெற்றது. மெலிஸ் என்பவரின் குடும்பம் கடந்த 9 தலைமுறையாக இதே ஊரில் வசித்து வருகின்றனர் என்ற சாதனையுடன் அது கின்னஸ் சாதனை படைக்கப் பெற்றது.  கன்சோலடா மெலிஸ் என்பவரின் வம்சாவளியினர்தான் இந்த ஊரின் மிகவும் மூத்த குடும்ப வம்சாவளியினர் ஆவர். அவர் தனது 105 ஆவது வயதில் கடந்த 2015 இல் காலமானார். இந்த ஊரை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சுத்தமான காற்று, மாசில்லாத சுற்றுச்சூழல், ஆரோக்கியமான உணவு உள்ளிட்டவைதான் இங்கு வாழ்பவர்கள் அதிக ஆண்டுகள் உயிருடன் இருப்பதற்கு காரணம் என்பதை கண்டறிந்தனர். தற்போது 10க்கும் மேற்போட்டோர் இவ்வூரில் சென்சுரி அடித்துள்ளனர். கேட்கவே பொறாமையாக இருக்கு அல்லவா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago