முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இந்த வார ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: Monday, April 15, 2024 to Sunday, April 21, 2024
மேஷம்
aries-mesham

 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி --       இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச் செலவுகள் ஏற்படும் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசு பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும்..  வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பரணி  --       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேற்றுவதால் குதுகலமாய் இருப்பர். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.  மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாக குடும்ப முன்னேற்றமும் ஏற்படும்.

கார்த்திகை  1 ஆம் பாதம்.—       இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். பூஜா              வழிபாடுகளால்  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களை காட்டிலும்  அரிய சாதனைகள் புரிவார்கள். சிலரின் உடல் நலிவுறும். பெண்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீண் அலைச்சல்கள், வெட்டிச் செலவுகளும் தவிர்க்க முடியாததாகும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பால் அரசுப் பணியாளர்களின் ஆசைகள் நிறைவேறும். பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முற்பட வேண்டும்.

ரிஷபம்
taurus-rishibum

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் –       இந்த வாரம் குழந்தைகளின் சீரான முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும். உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாக கழியும். பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருட்களின் விற்பனை சூடுபிடிக்கும். இரவு பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மக்கள் சேவையில் ஈடுபட்டதன் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்கள் புகுத்தி ஆதாயம் காண்பர்.

ரோகிணி  –       இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் வீட்டில் அமைதி நிலவும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்.  தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தன வருமானம் தாராளமாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதப்படலாம். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை எடுத்தல் அவசியம்.

மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் –       இந்த வாரம் புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராகும். குழந்தைகள் படிப்பு வகையில் செலவுகள் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  ஆக்கபூர்வமான ஆலோசனை அளித்து அன்பு நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவர். எதிர்கால தொழில் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது முன்னேற்றத்தைத் தரும். பகைகளை வெல்லும் திறன்  ஏற்படும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படும்.

மிதுனம்
gemini-mithunum

(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். –       இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். தெய்வப் பிரார்த்தனையால், தாமதமான திருமணங்களும் தடபுடலாக நடக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும். புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். தொழில் புரிபவர்களுக்கு அரசு மற்றும் வங்கி மூலம் உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.  அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசு பணிபுரியும் பெண்கள் விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர்.     

திருவாதிரை ---       இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால்  மனமகிழ்ச்சி ஏற்படும். தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். உறவுகளுடன் சென்று மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகள் கையாள்வீர்கள்.  சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராவர். சுறுசுறுப்பற்ற நிலையில் காரியத் தடைகள் ஏற்படும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  உங்கள் செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.       இந்த வாரம் செல்வ நிலையும் உயரும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனி வீடு அமையும். சீரான பொருளாதார நிலையில், மனதிற்குப் பிடித்த படி மனை, வண்டி வாகனம் என அனைத்தும் கிடைக்கும்.  குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பிற்கால நலன்கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உயர்  அதிகாரிகள் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்குப் புதிய வாகன யோகம் ஏற்படும். கூட்டாளிகளின் நியாயமற்ற நடவடிக்கைகள் உங்கள் மனதில்  குழப்பத்தை தரும். விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் எதிர்பார்த்தபடி எளிதில் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்குத் திருமண காலம் கூடிவரும்.                                                                                                                                                                                                                   

 

கன்னி
virgo-kanni

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.       இந்த வாரம் சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். சந்ததி விருத்தி ஏற்படும். தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும் மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் சிலருக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படும். அரசுப் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும்.  எதிரிகளின் பணமும் வந்து சேரும்.  வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவம் உண்டாகும். புதிய வியாபார யுக்திகள் அதிக இலாபம் அடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.

அஸ்தம் –       இந்த வாரம் வாக்கு வன்மை ஓங்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள்.  அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். 

சித்திரை – 1,2 பாதங்கள் –       இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். நல்ல பல கருத்துக்களை கேட்பதின் மூலம் உங்களுக்கு  ஞான தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  சினத்தை அடக்கி உடன் பிறப்புகளுடன் ஒத்துச் செல்வது நல்லது.  புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக வருவாய் பெருக்கம் ஏற்படும்.  புதிய முயற்சிகள் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் ஏற்படும்.

மகரம்
capricorn-magaram

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---       இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகள் தயவால் அனுகூலமான பலன்கள் அடைவர்.

திருவோணம்-       இந்த வாரம் பல வகையான உயர்தர வாகன வசதிகள் அமையும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும்.    நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். உடன் பிறப்புக்களின் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவி கள் கிடைக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதங்கள் –       இந்த வாரம் பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உறவுகளை அனுசரித்து சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.  மாணவர்கள் தங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.  

கடகம்
cancer-kadagam

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.       இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். எந்த ஒரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம். மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் கருத்துடன் படித்துப் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். அரசுப் பணிக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று, புதிய பதவிக்கான பணி உத்தரவை பெறுவர். பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகள் கெடுபிடி காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு வேறு இடத்திற்கு அல்லது பணிக்கு மாற முற்படுவர். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும்.  சிலருக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம்.

பூசம் --        இந்த வாரம் கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். எதையும் சாதிக்கும் திறன், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். செல்வாக்கு மிக்க நபர்கள் உதவியால் உங்கள் பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், பதவி உயர்வுகள் தேடி வரும். சிறு தொழில் புரிபவர்களுக்கு தேவையான வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். தொழில் சிறக்கும்.

ஆயில்யம் –       இந்த வாரம் உங்களுக்கு தெய்வ சிந்தனைகள் மனதில் அமைதி நிலவும்.  எடுக்கும் முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள்.  சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும்.  விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். ஓய்வெடுத்து, உல்லாசமாய் பொழுது போக்கும் விதமாக, நமக்கு எல்லா நாட்களும் விடுமுறை நாட்களாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. எனவே, கஷ்டங்கள் வந்தாலும் கலங்காதீர்கள். கேளிக்கை மற்றும் ஆடம்பர செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.     

சிம்மம்
leo-simmam

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் –       இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.  நல்ல குரு வாய்க்கப்பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். எடுத்துக் கொண்ட புதிய திட்டங்களில் எதிர்பாராத தாமதங்கள் தடைகள் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்பப் போதுமான ஊதியம் இருக்காது.

பூரம் –       இந்த வாரம் மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றல் வீசும். மணமேடை ஏறும் மங்கல நாளும் வந்து, மனதில் மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். சிலர் வீட்டில் அள்ளி அணைத்திடவே பிள்ளைச் செல்வம், துள்ளி விளையாடும். அரசு அதிகாரிகளால் சிலருக்குத் இடையூறுகள் ஏற்படலாம். ஆனால், அரசியல் பெரும் புள்ளிகளின் ஆதரவால், பதவிவுயர்வு கள் சுலபமாக கிடைக்கும்.  சிலருக்குக் குழந்தைகள் மூலம் தொல்லையும், அவமானங்களும் ஏற்படலாம். தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைக்கு மாறி வேகம் பிறக்கும். அதன் காரணமாக இலாபமும் அதிகரிக்கும்.

உத்திரம்- 1 பாதம் –      இந்த வாரம் நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம்,  கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும். எனவே  துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள். வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள்.

துலாம்
libra-thulam

( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் –       இந்த வாரம் சுப காரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். இசை ஆர்வத்தால் சங்கீத சபா களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதர்மங்கள் செய்வார்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்.  உங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் பணியில் இட மாற்றங்கள் ஏற்படலாம்.  வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்.

சுவாதி –      இந்த வாரம் சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புது புது முயற்சியில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். விரும்பிய பொருட்களை எல்லாம் வீட்டில் வாங்கிக் குவிப்பீர்கள்.  வியாபாரப் பயணங்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவார்கள்.   உறவு மற்றும் நண்பர்கள் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக ஆதாயம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர்.  திட்டமிட்டுச் செலவு செய்தால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் குறையும்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் –      இந்த வாரம் அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கிடைக்கும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். தொலைதூர செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். உங்கள் உடலில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.

மீனம்
pisces-meenam

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் –       இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு.  உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. தொலைதூர செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். உங்கள் தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களின்  அறிவுத்திறன் கூடும். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

உத்திரட்டாதி-       இந்த வாரம் நல் ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும்.மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால் அபராதம் கட்ட நேரலாம். சிலருக்குத் தோல் உபாதைகள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவர்.

ரேவதி-       இந்த வாரம் மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.   சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பார்கள்.

தனுசு
sagittarius-thanusu

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் –       இந்த வாரம் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். உங்கள் சகோதரனின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்பு தேவை. உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.  அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்து விடுவார்கள்.  தொழில் இலாபம் ஆகிய சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்.

பூராடம் –       இந்த வாரம்  புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தித் திறன் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

.உத்திராடம் –1 ஆம் பாதம் –       இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப்பெரிய சாகசங்களை புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும்.

விருச்சிகம்
scorpio-viruchagam

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம் –        இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புத்திர பாக்கியம் ஏற்படும். விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதை கழிப்பீர்கள். உங்களுக்குத் திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும்.  தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். அரசியல்வாதிகளிடம் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி திக்கை நோக்கிச் செல்லும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும்.

அனுஷம் –       இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்பட்டு  அதன் காரணமாக இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகள் நன்மைகளும் ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  அரசு பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.  கவர்ச்சிகரமான பொருட்களை பரிசாக அறிவித்து வியாபாரிகள் உங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயம் நிலவும்.

கேட்டை –     இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும். உறவுகளிடம் இருந்து சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.  மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்
aquarius-kumbam

( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்—       இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும் அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். சுகமான சுற்றுலாப் பயணங்களின் மூலம் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்.

சதயம்-       இந்த வாரம் தன லாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் இலாபங்கள் அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வேலையில் சிரத்தையும், கடின உழைப்பு மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். அப்போதுதான் உங்கள் பொருளாதார நிலையும் சீராகும். நண்பர்களும் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் –      இந்த வாரம் சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும்.  நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்