முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதாயத்திற்காக காங்கிரஸ் என் மீது குற்றம் சுமத்துகிறது

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

வாரணாசி, பிப்.22 - அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் கட்சி தன் மீது சுரங்க ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.எஸ்.எடியூரப்பா உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசியல் ஆதாயத்திற்காகவே காங்கிரஸ் கட்சி தன் மீது சுரங்க ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது என்றார். ஆனால் உண்மை என்ன என்பது விரைவில் தெரியவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் கட்சி யார் மீதும் எந்த குற்றச்சாட்டையும் சுமத்தும் என்றும் தனது அரசியல் அந்தஸ்தை கெடுக்கும் வகையில்தான் காங்கிரஸ் கட்சி இது போன்ற குற்றச்சாட்டுக்களை தன் மீது சுமத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஊழல் குறித்த விசாரணை ஏதும் நடைபெற்று வருகிறதா? என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம் என்றும் எடியூரப்பா கூறினார்.

உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.  ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும்  3 கட்ட தேர்தல்கள் நடக்க இருக்கின்றன.

இந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து எடியூரப்பா பிரச்சாரம் செய்து வருகிறார்.

வாரணாசியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்த போதுதான் அவர் மேற்கண்ட தகவல்களை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்