முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. மார்ச். 23 - தமிழக சட்டசபை தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிடும் இ. கம்யூனிஸ்டு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியகுளம் தனித் தொகுதியில் லாசரும், திண்டுக்கல் தொகுதியில் பாலபாரதியும், மதுரை தெற்கு தொகுதியில் இரா. அண்ணாதுரையும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுக்கூட்டம் திருச்சியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், டி.கே.ரெங்கராஜன் எம்.பி., வாசுகி, மற்றும் மாநில செயற்குழு, மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்கு பின் வரும் சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12 தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். அதில் பெரம்nullர் தொகுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், சிதம்பரம் தொகுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், திருப்nullர் (தெற்கு) தொகுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், பெரியகுளம் (தனி) தொகுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், திண்டுக்கல் தொகுதியில் மாநில குழு உறுப்பினர் கே.பாலபாரதி, அரூர் (தனி) தொகுதியில் தர்மபுரி மாவட்ட செயலாளர் பி.டில்லிபாபு, விளவங்கோடு தொகுதியில் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லீமாரோஸ், விக்கிரவண்டி தொகுதியில் மாநில குழு உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, பாளையங்கோட்டை தொகுதியில் நெல்லை மாவட்ட செயலாளர் வி.பழனி, மதுரை தெற்கு தொகுதியில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் இரா.அண்ணாதுரை, மதுரவாயல் தொகுதியில் தென்சென்னை மாவட்ட செயலாளர் க.பீம்ராவ், கீழ்வேளூர் (தனி) தொகுதியில் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகை மாலி(எ)வி.பி.மகாலிங்கம் ஆகிய 12 தொகுதிகளில் போட்டியிடுவதாக பட்டியலை மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 

திமுக, காங்கிரஸ் கூட்டணியை இந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தோல்வி அடைய செய்வோம். மக்களிடையே ஊழல், வலைவாசி உயர்வு, மின்சாரவெட்டு ஆகிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அதரவாக பிரச்சாரம் செய்வோம். இந்த தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்து இருந்தது. ஆனால் யாருக்கும் தரவில்லை.  திருமங்கலம் தொகுதியைபோல் இந்த சட்டமன்ற தேர்தலில் வன்முறை, பணம் கொடுப்பது, தில்லுமுல்லு ஆகியவற்றை முறியடிப்போம். நாங்கள் விழிப்புணர்வுடன் இந்த தேர்தலில் செயல்படுவோம். தொகுதி உடன்பாடில் அதிமுகவுடன் எங்களுக்கு எந்தவித குழப்பமும் இல்லை. மதிமுகவை இந்த தேர்தலில் போட்டியிட அழைத்தோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். கூட்டணிகட்சி தலைவர் ஜெயலலிதாவும் அழைப்பு விடுத்தார். அதை ஏற்க மறுத்து விட்டார். இதனால் இந்த கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பொய்யான வாக்குறுதி கொடுத்து வரும் திமுக இந்த தேர்தலில் வெற்றிபெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்