முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் கோவிலில் முதல்வர் சாமி தரிசனம்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை.மார்ச்.8 - மகம் நட்சத்திரப்படி நேற்று பிறந்ததினத்தை கொண்டாடிய முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் கோவிளுக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று சாமிதரிசனம் செய்து விட்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.  மகம் நட்சத்திரப்படி நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளாகும். இதையெட்டி நேற்று மாலை அவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயிலுக்கு அவர் சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். ஜெயலலிதாவின் பிறந்த தினம் பிப்ரவரி 24ம் தேதியாகும். ஆனால், அவருடைய மகம் நட்சத்திரப்படி (புதன்கிழமை​மார்ச் 7) பிறந்த தினம் வருகிறது. இதையெட்டி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய நேற்று மாலை சென்னையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு சென்றார்.

அவரை சென்னையில் அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். பின்னர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவியில் ஜெயலலிதா சுவாமி தரிசனம் செய்தார்.  . சுவாமி தரிசனம் செய்த பின்னர் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவரை அமைச்சர்கள் முக்கிய அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

ஜெயலலிதாவின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்திலும், ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திலும் நேற் று முன்தினம் இரவு முதலே மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.ஸ்ரீரங்கம் தான் ஜெயலலிதா கடந்த தேர்தலில் வென்ற சட்டமன்றத் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் மகம் நட்சத்திரப் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையிலும் நேற்று  நடைபெற்றன.

மைலாப்nullர் கபாலீஸ்வரர், பிராட்வே காளிகாம்பாள் கோயில் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

காளிகாம்பாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜெயக்குமார், மற்றும் அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்