முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அமைச்சருடன் விரைவில் பேச்சு: ஹிலாரி

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச். 25 - போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உண்மையான விரைவான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே நீடித்த நிலைத்த அமைதிக்கு வாய்ப்பு ஏற்படும் என்பதை சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து இலங்கைக்கு அமெரிக்கா உறுதிபட புரிய வைத்துள்ளது. விரைவில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் பெரீசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக நாங்கள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்து ஹிலாரி மேலும் கூறுகையில், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பயங்கர கொலைகள் தொடர்பாக விரிவான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. 27 ஆண்டுகால உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இலங்கை நீடித்த நிலைத்த அமைதியை நோக்கி நடைபோட இந்த தீர்மானம் உதவும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகத்தன்மையுடன்கூடிய உண்மையான விரைவான மறுவாழ்வு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை உலக சமுதாயத்துடன் இணைந்து அமெரிக்க உரக்க சொல்லியுள்ளது. இலங்கைக்கு அனைத்து வகையிலும் உதவ உலக சமுதாயம் காத்திருக்கிறது. எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை விரைவாகவும், முழுமையாகவும் இலங்கை அரசு அமல்படுத்தும் என்று நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஆவலாக உள்ளோம் என்றார் ஹிலாரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்