முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் மருத்துவ மனைகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.26 - பன்றிக்காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாவிட்டால் உடனே அந்த நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று மக்கள்நல் வாழ்வுத்துறை கூறினார். சட்டசபையில் நேற்று பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ.) கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் விஜய் அளித்த பதில் வருமாறு:-

தமிழ்நாட்டில் இதுவரை 77 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார்கள். 4 பேர் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும் தனியார் மருத்துவ மனைகளில் ஆரம்பத்தில் சிகிச்சை பெற்ற போது டாமி புளு மாத்திரை கொடுக்கப்படாததாலும் நோய் தாக்கம் அதிகமாகி இறந்து விட்டார்கள். இந்த நோய் கண்டறியப்பட்டவுடன் டாமிபுளு மாத்திரை கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இல்லையென்றால் வைரஸ் ரத்தத்தில் பரவி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். தனியார் மருத்துவமனையில் டாமிபுளு மாத்திரைகள் பெரும்பாலும் கொடுக்கப் படுவதில்லை. எனவே பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாவிட்டால் உடனே அந்த நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்