முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன்: பயஸ்-பெயா ஜோடி முன்னேற்றம்

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். 2 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் பெயா ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. இந்த வருடத்தின் 2- வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநக

ரான பாரிசில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்

தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஆஸ் திரிய வீரர் அலெக்சாண்டர் பெயாவுட ன் இணைந்து ஆடி வருகிறார். 

இந்திய மற்றும் ஆஸ்திரிய ஜோடி முத ல் சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த சைமன் பொலேலி மற்றும் பேபியோ பாக்

னினி இணையைச் சந்தித்தது. 

3 செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் லியாண்டர் மற்றும் பெயா ஜோடி அபாரமாக ஆடி, 6- 1, 6 - 7(2), 6- 3 என்ற செட் கணக்கில், வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த முதல் சுற்றில் இந்தி ய மற்றும் ஆஸ்திரிய ஜோடி துவக்கம் முதல் சிறப்பாக ஆடி, 6- 1 என்ற செட் கணக்கில் வென்றது. அடுத்து நடந்த 2- வது செட்டில், இத்தாலி இணை போராடி செட்டை கைப்பற்றியது. 

பின்பு நடந்த 3-வது செட்டில் இந்திய மற்றும் ஆஸ்திரிய ஜோடி மீண்டும் சிறப்பாக ஆடி,  6- 3 என்ற கணக்கில் செட்டை தனது வசமாக்கியது. இந்த ஆட்டம் சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது. 

மற்றொரு முதல் சுற்று ஒன்றில், ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் எல்ஜின் மற்றும் உஜ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த டெனிஸ் இஸ்டோமின் ஜோடி 3- 6, 6- 3 7- 6 (0) என்ற செட் கணக்கில் பெலாரசைச்   சேர்ந்த ஸ்டீவ் டார்சிஸ் மற்றும் ஒலிவியர் ரோச்சஸ் இணையை வென்றது. இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ஆஸ்திரியாவின் பெயா ஜோடி அடுத்து நடக்க இருக்கும் 2-வது சுற்றில் ரஷ்ய மற்றும் உஜ்பெக் இணையுடன் மோத இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்